கடந்த 2009-ம் வருடம் ஜேம்ஸ் கேமரூன் இயக்கி வெளியாகிய அவதார் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பிரம்மாண்டத்தின் உச்சத்தில் இருந்த இந்த படத்தின் காட்சிகள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார் 2 “அவதார்: தி வே ஆஃப் வாட்டர்” எனும் பெயரில் பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் ஜோ சல்டனா, சாம் வோர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ் உட்பட பலர் நடித்து இருக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்ற வருடம் நிறைவுபெற்ற நிலையில், தற்போது படக்குழு இறுதிக்கட்ட பணியில் தீவிரம்காட்டி வருகிறது. அவதார் 2 திரைப்படத்தில் டைட்டானிக் பட கதாநாயகி கேட் வின்ஸ்லெட், நவிவீரர் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் அவதார்: தி வே ஆஃப் வாட்டர் திரைப்படத்தின் தமிழ்பதிப்பின் போஸ்டர் இப்போது வெளியாகியுள்ளது. சமூகவலைத்தளத்தில் வெளியாகிய இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் உலகம் முழுதும் 160 மொழிகளில் டிசம்பர் 16ம் தேதி பிரம்மாண்டமாக திரையரங்கில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.