Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவதிப்பட்ட தொழிலாளி…. தாங்க முடியாமல் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

உடல்நலக்குறைவால் அவதியடைந்த கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்துள்ள கோனூர் கந்தம்பாளையம் பகுதியில் வீரப்பன் (வயது 65) என்பவர் வசித்து வந்துள்ளார். கூலித் தொழிலாளியான இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த வீரப்பன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனை பார்த்த அவரது உறவினர்கள் உடனடியாக வீரப்பனை மீட்டு நாமக்கலில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக வீரப்பன் உயிரிழந்துள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் வீரப்பனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |