சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவோர் மீது புகார்களில், முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான செய்தியில், ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் கருத்துக்கள் பொது அமைதிக்கும், சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் ஏற்படுத்தும் சூழ்நிலையிலும், அவதூறு செய்தி பரப்புவோர் மீது அளிக்கப்படும் புகார்களில் முகாந்திரம் இருக்கும் பட்சத்திலும் மட்டுமே காவல் துறையினர் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகின்றனர், என்று தமிழ்நாடு காவல்துறை செய்தி குறிப்பில் கூறப்பட்டள்ளது.
Categories