Categories
மாநில செய்திகள்

அவதூறு வழக்கில் கைதான நடிகை…. நீதிமன்றத்தில் இன்று ஆஜர்…. குற்றத்தை மறுத்ததால் விசாரணை ஒத்திவைப்பு….!!!

அவதூறு வழக்கில் கைதான நடிகை நீதிமன்றத்தில் ஆஜரானார்.

நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் ஷாம் அபிஷேக் ஆகியோர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இனத்தவர்களை அவதூறாக பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நடிகை மீரா மிதுன் மற்றும் ஷாம் அபிஷேக் மீது மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மீராமிதுன் மற்றும் ஷாம் அபிஷேக்கை கைது செய்தனர்.

அதன் பின் ஜாமினில் மீராமிதுன் மற்றும் ஷாம்‌அபிஷேக் இருவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் குற்றச்சாட்டு பதிவுக்காக நடிகை மீரா மிதுன் மற்றும் ஷாம் அபிஷேக் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர். அவர்களிடம் குற்றம் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, நாங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் பட்டியலினத்தவர்களை அவதூராக பேசவில்லை என்று கூறியுள்ளனர். மேலும் வழக்கை எதிர்கொள்ள நாங்கள் தயார் என்று கூறியதால், ஜூலை 18-ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |