அவதூறு வழக்கில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி ஓபிஎஸ்- இபிஎஸ் தரப்பில் வைக்கப்படும் முறையீட்டை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது. எனவே அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார்கள் என்று கூறப்படுகிறது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கின் விசாரணைக்காக நேரில் ஆஜராகுமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தங்களுக்கு எதிரான இந்த அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரியும், விசாரணைக்கு தடை கோரியும் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும் பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியே மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என ஈபிஎஸ் -ஓபிஎஸ் தரப்பில் நீதிபதி நிர்மல்குமார் முன்பு நேற்று முறையிடப்பட்டது. இதனை ஏற்க மறுத்த நீதிபதி எம்பி, எம்எல்ஏக்கள் வழக்குகள் வெள்ளி கிழமைதான் பட்டியலிடப்படும் என தெரிவித்தார். அதேசமயம் விசாரணை நீதிமன்றத்தில் ஏதேனும் எதிர்மறை உத்தரவு பிறப்பித்தால் அப்போது உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி அனுமதியளித்தார்.