Categories
மாநில செய்திகள்

அவதூறு வழக்கு – ஏப்., 8ம் தேதி மு.க. ஸ்டாலின் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவு!

அவதூறு வழக்கில் ஏப்., 8ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக மு.க. ஸ்டாலினுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக உள்ளாட்சித் துறையில் ஊழல் நடக்கிறது, அரசு அதிகாரிகள் பலர் ஊழலுக்குத் துணை போகின்றனர். சுமார் ரூ.1000 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதால் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் எஸ்.பி வேலுமணி சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரப்பட்டது.

மாநகராட்சி முறைகேடு, மத்திய அரசின் கைப்பாவை என கூறியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த மாதம் 24ம் தேதி ஆஜராகும் படி மு.க ஸ்டாலினுக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே நேரில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்கக் கோரியும், அமைச்சர் வேலுமணியின் ஊழலை மறைப்பதற்காகத் தான் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதால் வழக்கை ரத்து செய்யக் கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் வழக்கை மார்ச் 4ம் தேதி ஒத்திவைத்தனர். அதன்படி ஸ்டாலின் மீதான அவதூறு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஏப்ரல் 8ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக ஸ்டாலினுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஸ்டாலினுக்கு எதிரான 3 அவதூறு வழக்குகள் எம்பி, எம்எல்ஏக்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

Categories

Tech |