திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சில்வார்பட்டி பகுதியில் டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையை மாற்றுவதற்காக பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மனு அளித்தனர். இருப்பினும் சரியான நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் தான் போராட்டம் நடைபெற்றது. ஒரு சமயத்தில் சாலைகளில் நாம் இருவர் நமக்கு இருவர் நமக்கு ஒருவர் என எழுதப்பட்டிருந்தது. தற்போது பார்த்தால் அனைத்து இடங்களிலும் குழந்தை வேண்டுமா சோதனை குழாய் குழந்தை என பெயர் பலகைகள் நிறைந்துள்ளது.
1967க்குப் பின் தான் கலைஞர் கருணாநிதி மதுபான கடையை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்தார். சாராயக்கடைகளாக தொடங்கிய இவை தற்போது வெளிநாட்டு மதுபான விற்பனை என ஏராளமான மதுபான கடைகளாக பெருகிவிட்டன. இந்த மதுபான கடைகளால் அவனவன் தனக்கு பிள்ளை பெற முடியாமல் போய்விட்டது. ஆகையால் மதுபானக் கடைகளை முழுவதுமாக அகற்றி அவனவன் பொண்டாட்டிக்கு அவனவன் பிள்ளை பெற மதுபானக்கடைகளை முழுவதுமாக அகற்ற நடவடிக்கை எடுக்க முதல்வர் முன்வர வேண்டும்.