Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

அவனால தான் இப்படி ஆச்சு… இளம்பெண்ணின் விபரீத முடிவு… உறவினர்களின் பரபரப்பு புகார்…!!

கணவன் கொடுமையால் மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்களிடையே  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள புதூர் உத்தமனுர் தேரடி பகுதியில் தினேஷ் என்ற விவசாயி வசித்து வருகிறார்.  இவருக்கு நிகிதா என்ற மணைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு திருமணமாகி இரண்டரை ஆண்டுகள் ஆகின்றது. இந்நிலையில் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் நிகிதா எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவரை  அருகில் உள்ளவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காமல் நிகிதா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.

இது குறித்து அருகில் உள்ள காவல்நிலையத்தில் நிகிதாவின் உறவினர்கள் தினேஷ் மீது புகார் கொடுத்துள்ளனர். அந்த புகாரில் நிகிதாவை அவர் கொடுமைப்படுத்தியதாகவும், நிகிதாவின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து நிகிதாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Categories

Tech |