மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கப்படக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது மிகவும் புகழ்பெற்றது ஜல்லிக்கட்டு. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அதில் நன்றாக விளையாடும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கும் முதல் பரிசு வழங்கப்படும். அதன்படி அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் எந்த சமூகத்திற்கும், காளைக்கோ அல்லது மாடுபிடி வீரருக்கோ முதல் மரியாதை வழங்கப்படக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் அரசியல் சமூகம் உட்பட எவ்விதமான பிளஸ்க் பேனர்களும் வைக்கப்பட கூடாது. ஜல்லிக்கட்டு கணக்கு வழக்குகளை பராமரிக்க தனி வங்கி கணக்கை தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது.