Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“அவனை கல்யாணம் பண்ண முடியல” இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் பெற்றோர்…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூர் பகுதியில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு என்ஜினீயரிங் பட்டதாரியான அனுசியா என்ற மகள் இருந்துள்ளார். இவர் வரதராஜபுரம் பகுதியில் அழகு நிலையம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் தன்னுடன் கல்லூரியில் படித்த சக மாணவரை அனுசியா காதலித்து வந்துள்ளார். இது குறித்து அறிந்த அனுசியாவின் பெற்றோர் அவரை கண்டித்ததோடு, வேறு ஒருவருடன் நிச்சயம் செய்துள்ளனர்.

இதனால் தனது காதலரை திருமணம் செய்ய முடியவில்லை என்ற ஏக்கத்தில் அனுசியா அழகு நிலையத்தில் வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |