பாலா தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவர் இயக்குநர் பாலுமகேந்திராவிடம் திரைப்படக்கலை பயின்றவர். இவர் இயக்கிய திரைப்படமானபிதாமகனில் நடித்த விக்ரம் நடிப்புக்கான இந்திய தேசிய விருது பெற்றுள்ளார். பி ஸ்டூடியோ என்ற நிறுவனத்தின் பெயரில் திரைப்படத் தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். நான் கடவுள் திரைப்படத்துக்காக, 2008 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்பட இயக்கத்துக்கான இந்திய தேசிய விருதைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில் அவன் இவன் படத்தில் சொரிமுத்து அய்யனார் கோவில் சிங்கம்பட்டி ஜமீன்தாரை இழிவுபடுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், பாலா அம்பாசமுத்திரம் நடுவர் நீதிமன்றத்தில் இயக்குனர் பாலா இன்று கண்டிப்பாக ஆஜராக குற்றவியல் நீதித்துறை நடுவர் கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தது. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் இருந்து பாலா விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.