அவன் இவன் படத்தில் விஷாலுக்கு டப்பிங் கொடுத்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாலா. இவர் இயக்கத்தில் வெளியாகும் படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறும். இவரது இயக்கத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்கள் ஆசைப்படுபவர்கள். பாலா இயக்கத்தில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான அவன் இவன் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த படத்தில் ஆர்யா, விஷால் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.
மேலும் இந்த படத்திற்காக நடிகர் விஷால் மிகவும் கஷ்டப்பட்டு கண் கருவை மையத்தில் வைத்து நடித்திருப்பார். இருப்பினும் அதற்கான அங்கீகாரம் அவருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்த படத்தில் பெண் வேடத்தில் நடித்த விஷாலுக்கு டப்பிங் கொடுத்த நடிகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் சித்தியாக நடிக்கும் செந்தில்குமாரி தான் விஷாலுக்கு டப்பிங் பேசியிருக்கிறார். இதனை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.