பள்ளி மாணவியை கடத்திய குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியில் வசித்து வரும் வாலிபர் ஒருவர், அதே பகுதியில் வசிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை கடத்தி உள்ளார். இதனை அறிந்த மாணவியின் பெற்றோர் தேவகோட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், அந்த வாலிபர், மாணவியை கோவைக்கு கடத்தி சென்றது தெரியவந்துள்ளது.
காவல்துறையினர், கோவைக்கு விரைந்து சென்று கடத்தப்பட்ட மாணவியை மீட்டனர். பின்பு அந்த மாணவியை மருத்துவசோதனைக்காக தேவகோட்டை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் மாணவியை கடத்திய அந்த வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.