Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“அவன் கடத்திட்டு போயிட்டான்” தாய் அளித்த புகார்….. போலீஸ் வலைவீச்சு…!!

சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.

புதுச்சேரியில் உள்ள மூர்த்திகுப்பத்தில் கொத்தனாரான சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து கொத்தனார் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சுரேஷிற்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார்.

எனவே சிறுமியின் தாயார் சுரேஷ் தனது மகளை கடத்தி சென்று விட்டதாக கடலூர் முதுநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை கடத்தி சென்ற சுரேஷை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |