Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“அவன் தொல்லை பண்றான்” தற்கொலைக்கு முயன்ற சிறுமி…. போலீஸ் நடவடிக்கை…!!

பாலியல் தொல்லை கொடுத்ததால் சிறுமி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மைக்கேல் பட்டி கீழத்தெருவில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஆனந்த் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுமி தனது வீட்டில் எலி மருந்தை தின்று மயங்கி கிடந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆனந்தை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |