உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் கிராமத்தில் தனது மருமகனை கோடரியால் தாக்கி கொன்ற நபர், இரத்தக்கறை படிந்த கோடரியுடன் போலீசில் சரணடைந்தார். தரியா கிராமத்தைச் சேர்ந்தவர் சூரஜ் பால். அவரது மருமகன் சுனில் (வயது 32). இவர் அந்த கிராமத்தில் கூலி வேலை செய்து வந்தார். சுனிலின் தந்தை பிகாம் சிங் தன்னுடைய மனைவியை கொன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் பிகாம் சிங் உடல்நிலை மோசமானதையடுத்து, கான்பூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிறை அதிகாரிகளால் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் சூரஜ், பிகாம் சிங்கை சந்திக்க வந்த போது அவரை சந்திக்க விடாமல் சுனில் தடுத்துள்ளார். இதையடுத்து சுனிலுக்கும் சூரஜ்-க்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கோபத்தில் சூரஜ், சுனிலை கோடரியால் தாக்கி கொன்றார். தொடர்ந்து இன்று காலையில் இரத்தக்கறை படிந்த கோடரியுடன் சவுரிக் போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். சுனிலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், எப்.ஐ.ஆர் பதிவு செய்து சூரஜ் பாலை கைது செய்தனர். மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.