Categories
சினிமா தமிழ் சினிமா

“அவரிடம் நடிப்பதே பெரும் பாக்கியம் தான்”…. நடிகர் ஜெயம் ரவி நெகிழ்ச்சி….!!!!!

மணிரத்னம் இயக்கி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டுவிழா நேற்று முன்தினம் சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடந்தது. இவற்றில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம்ரவி, விக்ரம், பிரபு, நாசர், சரத்குமார், ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ஷோபிதா, அதிதி ராவ் உட்பட பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் ஜெயம்ரவி பேசியிருப்பதாவது, “இந்த வாய்ப்பு உங்களுக்கு எப்படி கிடைத்தது என எல்லோரும் கேட்டனர்.

எனக்கு தெரியாது மணிரத்தினம் சார் கூப்பிட்டார் நான் சென்று நடித்தேன் என கூறினேன். இந்த கதாபாத்திரம் கிடைத்ததற்கு நான் அப்படி என்ன நல்லது செய்து விட்டேன் என தோன்றியது. அப்போது கொஞ்சம் தீவிரமாக யோசித்தபோது, நான் சினிமாத்துறைக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகிறது. நீண்ட ஆண்டுகளாக உழைத்து இருக்கிறேன். அதன் பலனாகத் தான் இந்த கதாபாத்திரமானது எனக்கு கிடைத்திருக்கிறது என எனக்கு தோன்றியது. கமல் சாரும், ரஜினி சாரும் பல வருடங்கள் தங்களின் உழைப்பால் தான் முன்னுக்கு வந்தார்கள். அப்படிப்பட்ட உழைப்பால் தான் எனக்கு இப்படம் கிடைத்திருக்கிறது எனவும் நான் நம்புகிறேன்.

பேச்சால் ஒருவரை மாற்றமுடியுமா? என நினைத்தேன். எனினும் அது மணி சாரால் முடியும் என்று நான் தெரிந்துகொண்டேன். ஏனெனில் அருண்மொழிவர்மன் மக்களிடம் எவ்வாறு இருப்பான், அக்காவிடம் எப்படி இருப்பான், மற்ற ராஜாக்களிடம் எப்படி இருப்பான் என ஒவ்வொன்றாக விளக்கிக் கொண்டே வந்தார். அவர் கூறியதும் ஒரு மூட் கிரியேட்ஆச்சி. அதன்பின் அப்படியே வீட்டிற்கு சென்றேன். எப்போதும் அதேமூடில் இருந்ததனால் வீட்டில் திட்டு வாங்கினேன். 6 மாதத்தில் அதேமூடில் அவர் சொல்லிக் கொடுத்தது போல் நடித்தேன். அவரிடம் நடிப்பதே பெரும்பாக்கியம்” என பேசினார்.

Categories

Tech |