சர்ச்சையாக பேசுவதை தான் திருமாவளவன் கொள்கையாக வைத்துள்ளார் என பாஜக செய்தித் தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார்.
பாஜகவின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த போது பாஜகவின் தலைமை ஆணையிட்டால் நான் ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடுவதற்கு தயாராக இருக்கிறேன் என குறிப்பிட்டிருந்தார். அப்போது ஒரு அப்பாவுக்கு பிறந்த விநாயகர் ஹிந்தி கடவுள் முருகன் தமிழ் கடவுளா என சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் திருமாவளவன் பேசியது குறித்து குஷ்புவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர் திருமாவளவன் தன்மீது ஊடகத்தின் வெளிச்சம் வேண்டும் என்ற காரணத்திற்காக சர்ச்சை நிறைந்த கருத்துக்களை பேசுவதை கொள்கையாக கொண்டிருப்பதாகவும், அதனை விட்டுவிட்டு பொதுமக்களுக்கு நல்லது செய்யும் செயல்களை திருமாவளவன் கொள்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.