இன்று கொரோனா ஆய்வு பணிகளை மேற்கொண்ட தமிழக முதல்வர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது… கு.க செல்வம் பாஜகவுக்கு செல்வது திமுகவின் உட்கட்சிப் பூசல். அதுக்கும் எங்களுக்கு என்ன சம்பந்தம் ? நயினார் நாகேந்திரன் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து தான் பாரதிய ஜனதா கட்சிக்கு சென்றார். அவர் எங்களுடைய கட்சிக்கு மீண்டும் வந்தால் நாங்கள் நிச்சயமாக சேர்த்துக் கொள்வோம்.
எங்களுக்கு இந்தி தெரியும்னு SV சேகருக்கு எப்படி தெரியும். அவரு பாரதீய ஜனதா கட்சியை சேர்ந்தவர், தேர்தல் பிரச்சாரத்துக்கு வரவே இல்ல. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எங்களுடைய கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி எல்லாம் நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்தோம். அப்போது எங்கேயுமே அவரு பிரச்சாரத்துக்கு வரல.
அது மட்டும் இல்ல… அவரு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தான் இருந்தாரு… அதிமுகவை தான் புகழ்ந்து பேசிக்கொண்டு இருந்தாரு. சரியான முறையில் கட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்காத காரணத்தால் தான் அம்மா நீக்கினார்கள். அவரும் கட்சை விட்டு வெளியேறினார். அவருக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அவர பெரிய கட்சி தலைவராக நினைக்கலை. எதாவது பேசுவாரு, பேசிட்டு ஏதாவது வழக்கு வந்தா போய் ஒளிந்து கொள்வார்.