Categories
மாநில செய்திகள்

“அவருக்கு கணக்கு கூட தெரியாது” …. சரமாரியாக கேள்வி எழுப்பிய அமைச்சர் பி.டி.ஆர்….!!!!

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிக்கை ஒன்றை  வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் பழனிவேல்    தியாகராஜன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தமிழ்நாட்டில் மின் கட்டணம், சொத்து வரி போன்றவை உயர்த்தப்பட்டு இருப்பதால் அரசின் வரிவாய் அதிகரித்துள்ளது என கூறியுள்ளார். இந்நிலையில் மின் கட்டணம், சொத்து வரி வருமானம் போன்ற அனைத்தும் தமிழ்நாட்டு அரசு வருகிறது? அதுவும் இந்த ஆண்டு அதிகரிக்கப்பட்ட கட்டணம் எப்படி கடந்த ஆண்டு பட்ஜெட்டில் வருவாய் பற்றாக்குறையை குறைக்க செய்யும். இது என்ன கணக்கு என்று எனக்கு உண்மையாகவே தெரியவில்லை. மேலும் அ.தி.மு.க. அரசு தாலிக்கு தங்கம், விலையில்லா மடிக்கணினி, இருசக்கர வாகனம் போன்ற  திட்டங்களை கொண்டு வந்தது. ஆனால் நாங்கள் அதனை நிறுத்தி விட்டதாக கூறுகிறார். இது ஒரு அப்பட்டமான பொய் ஆகும். மேலும் கடந்த 2  ஆண்டுகளாக அ.தி.மு.க. அரசு எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை.

அதனை அவர்கள் நிறுத்தி விட்டார்கள். மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அ.தி.மு.க அரசின்  தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு ஒதுக்கிய நிதியை பெண்களுக்கு படிப்பு உதவி தொகையாக வழங்கி வருகிறோம். மேலும் அ.தி.மு.க. ஆட்சியில் மத்திய அரசு நிர்ணயித்த தொகையை விட 30 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள். ஆனால் அதனை பிரதமர் நரேந்திர மோடி கண்டு கொள்ளவில்லை. ஏனென்றால் இவர்கள் அவரது காலில் விழுந்து இருக்கிறார்கள். ஆனால் தற்போது நாங்கள் மத்திய அரசு அனுமதித்து இருக்கும் கடன் அளவைவிட குறைவாகத்தான் வாங்கி இருக்கோம். அதுவும் எனது அனுபவத்தின் பலனாக 4.61% ஆக இருந்த வருவாய்  3.35 சதவீதமாக குறைத்து இருக்கிறேன். ஆனால் ஆர்.பி. உதயகுமாருக்கு கணக்கு, சட்டம், பொருளாதாரம் என எதுவும் தெரியாது. மேலும் அவர் தான் அரசியலில் தொடர்ந்து நீடிப்பதற்காக இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார் என அதில் கூறியுள்ளார்.

Categories

Tech |