செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் குஷ்பூ, நாங்கள் போராட்டம் செய்யும் பொழுது புகைப்படம் வைக்கவில்லை. நீங்கள் பார்த்தீர்கள் என்றால் ஒவ்வொரு இடத்திலேயும் பெருசா, புஷ்பாஞ்சலி இருக்கும்போது புகைப்படம் வைத்துதான் ஆகவேண்டும். நாங்கள் போராட்டம் நடக்கும் போது, ஆர்ப்பாட்டம் பண்ணும்போது புகைப்படம் வைக்கவில்லை.
எங்கேயாவது நாங்கள் பின்னாடி ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது அந்த குழந்தையின் புகைப்படம் வைத்திருக்கிறோமா, புஷ்பாஞ்சலி நீங்கள் எப்படி புகைப்படம் இல்லாமல் கொடுக்கமுடியும். அடையாளம் வந்து எல்லா இடத்திலேயும் அடையாளத்தை காமித்து தான் செய்கிறீர்கள்.
பேப்பர்லே முதல் பக்கத்திலேயே பெயர் இருக்கிறது. ஒவ்வொரு செய்திகளிலும் அந்த குழந்தையின் பெயரும் புகைப்படமும் எல்லா எலக்ட்ரானிக் மீடியால அந்த குழந்தையின் வீடியோவும் இருக்கு. அப்போ நீங்க எல்லாரிடமும் போய் கேள்வி கேளுங்க. எல்லா மீடியா கிட்ட போய் கேளுங்கள் பேப்பர் மீடியா, எலக்ட்ரானிக் மீடியா எல்லாரிடமும் கேட்க வேண்டும்.
அண்ணாமலை அவர்கள் வந்து சட்டம் தெரிந்தவர். சட்டம் தெரியாமல் ஒரு விஷயத்தை செய்யமாட்டார். சட்டம் தெரியாமல் ஒரு விஷயத்தை செய்தால் அவரே அந்த ட்வீட்டை போட்டிருக்க மாட்டார்கள். அந்த வீடியோவை போட்டு இருக்கமாட்டார். அதனால் நிச்சயமாக அவருக்கு சட்டம் தெரியும், நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்தார்.