நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வரிசையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார். அதில் அவர் பேசியதாவது, கடந்த ஆட்சி அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி விட்டோம். இதனால் மக்கள் அதிமுக மீது நன்மதிப்பை கொண்டிருந்தனர். ஆனால் தற்போது ஆளும் திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.
அதோடு திமுக அளித்திருந்த பொங்கல் பரிசு தொகுப்பு பற்றி நாடே அறியும். இதுபோன்ற பயத்தால் தான் மு.க ஸ்டாலின் நேரடியாக பிரசாரத்தில் ஈடுபடாமல் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றி வருகிறார். அதோடு நேரடியாக தெருக்களில் சென்று பிரச்சாரம் செய்தால் மக்கள் தேர்தல் வாக்குறுதி குறித்து கேள்வி எழுப்புவார்கள் அதற்கு தன்னிடம் எந்த பதிலும் இல்லாததால் இதுபோன்ற காணொளிக்காட்சி பிரச்சாரங்களில் முதல்வர் ஈடுபட்டு வருகிறார்.” என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார் .