Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அவரு என்கூட பேசல….மனைவியின் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத கணவர்….!!

கணவன் பேசாமல் இருந்ததால் மனமுடைந்த மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த முருகன்(30) தனது மனைவி கீதா(25) மற்றும் 2 குழந்தைகளுடன் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள ஜமீன்இளம்பள்ளி பகுதியில் வசித்து வருகிறார். கணவன்-மனைவி இருவரும் அப்பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி கணவன்-மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் முருகன் கோபத்தில் கீதாவிடம் பேசாமல் இருந்துள்ளார். இதில் மனமுடைந்த கீதா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக கீதாவை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக கடந்த 16ஆம் தேதி புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கீதா பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து ஜோடர்பளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Categories

Tech |