செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் நாராயண திருப்பதி, இந்த நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூக நீதி வழங்க வேண்டும் என்று முதலில் சொல்லியது பாஜக. அதற்கு பிறகு 1981 இல் நடந்த தேர்தலில் தேர்தல் அறிக்கையில் மிகத் தெளிவாக சொல்லி இருந்தோம், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை நிறைவேற்றுவோம் என்று சொல்லியிருந்தோம் இவ்வளவும் செய்தது பாஜக.
அந்த பத்து வருடங்கள் 79 லிருந்து 89 வரை காங்கிரஸ் கூட்டணியில் இருந்த ஒரே காரணத்திற்காக திமுக வாய்மூடி மவுனம் காத்தது. இப்படி சமூக நீதிக்கும் அநீதி செய்த திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து இதே போன்ற உண்மைக்கு புறம்பான தகவல்களை சொல்வது கண்டிக்கத்தக்கது. ஜீ தமிழ் என்கின்ற ஒரு தொலைக்காட்சியில் சிறு குழந்தைகளை வைத்து பிரதமர் குறித்தும், நம் நாட்டின் பல்வேறு செயல்பாடுகள் குறித்தும் மிக மோசமாக தரம் தாழ்ந்து விமர்சித்ததற்காக நாம் அதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதில சிலர் சொல்றாங்க அவர் ஒரு எம்பி…. யாரா இருந்தாலும் அதை பத்தி எனக்கு கவலை இல்லை, இப்போ இதுல இன்னொரு முக்கியமான விஷயம் ஊடக சுதந்திரத்தை பாஜக பறிக்கிறது என்று சொல்கிறார்கள் என தெரிவித்தார்.