Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரு ஜாதி தலைவர்… அம்மாவே தூக்கி எறிஞ்சாங்க…. நான் நிரூபிக்கவா ?

செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தியிடம், சசிகலா அவர்களை இணைத்தால் அதிமுக தென்மாவட்ட கட்சிகளை போல் ஆகிரும், ஒரு ஜாதியின் ஆதிக்க கட்சி போல் ஆகிவிடும் என்று சொல்கிறார். கேபி முனுசாமி அவர்கள் கூட சொல்லியிருந்தார் அது குறித்து கேட்டபோது,

அவருக்கு ஜாதியை பற்றி தெரியாது, அவர் 10, 15 வருடம் ஜாதியை பற்றி பேசியதால் தான் அம்மா அவரை தூக்கி எறிந்தார்கள், அவர் ஒரு ஜாதி தலைவர், இல்லை என்று சொல்ல சொல்லுங்க, நான் நிரூபிக்கிறேன். அவர் பாமகவை பற்றி ஒரு வார்த்தை பேச சொல்லுங்கள், அவர் ஜாதி தலைவரா ? இல்லையா ? என்று நான் சொல்கிறேன்.

ஒரு எம்.பி சீட்டும் போச்சு, ஆட்சி மாற குழு எந்த முடிவு எடுப்பதே இல்லை, தன்னிச்சையாக ஒபிஸ்,இபிஸ் தான் எடுக்கிறார்கள், ஆட்சி மன்றகுழு கூடுவதே இல்லை, சட்டப்படி பல சிக்கல்கள் இங்கு நிறைந்து இருக்கிறது, எதிர்ப்புகள் வலுக்கிறது. எல்லோரும் ஒருங்கிணைவோம், இவர்கள் தலைமையில் இருந்து தூக்கி எறியப்படுவதிலே எந்த மாற்றுக் கருத்தும் இல்லை என தெரிவித்தார்.

Categories

Tech |