செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் முன்னாள் நிர்வாகியும், ஓபிஎஸ் ஆதரவாளருமான புகழேந்தி, மதுரையில் ராஜன் செல்லப்பா…. அவருக்கு நான் சொல்றேன்…. ராஜன் சொல்லப்பா ராஜன் சொல்லப்பா…. அம்மா உயிரோட இருந்தபோது ( 1996 – 1997இல்) 7 ராஜசபா எம்பி வெளிய போயி தனியா, ஒரு பொதுக்குழு கூட்டம் நடந்தது. திருநாவுக்கரசர் தலைமையில்…. நியாபகம் இருக்கா ? அந்த ஏழு பேர்ல நீயும் ஒரு துரோகி. நீயும் அம்மா கொடுத்த ராஜசபா சீட்டை பறிச்சுக்கிட்டு, வெளியில போன ஆளில் நீயும் ஒருத்தன்.
நீ வந்து ஓபிஎஸ் அண்ணனை பத்தி பேசுற. என்ன சார் இது ? அதனாலதான் சார் மழை சரியா பெய்ய மாட்டேங்குது. அடுத்தது மதுரை டான் உதயகுமார். அவரை எடுத்துக் கொண்டீர்கள் என்றால்…. அவர் என்ன பண்றாரு ? அவர் பிரமாதமான பேசுகிறார். தெற்கு மாவட்டங்களில் அண்ணன் ஓபிஎஸ் அவர்களுக்கு குழி பரிச்சது அந்த ஆளு தான், வேற யாரும் கிடையாது. பூரா கெடுத்து குட்டிச்சுவர் செய்தது ஆர்.பி உதயகுமார் தான்.
தேனியில் இருக்கின்றவர்கள் எல்லாம் சொல்லுவாங்க அண்ணன் கிட்ட…. இந்த ஆளை சேக்காதீங்கனு.. அண்ணன் தான் சேர்த்து, சேர்த்து, அவரை கொஞ்சம் மேல வச்சாரு. இப்ப அவர் உண்மையை சொல்ல ஆரம்பிச்சுட்டாரு. உதயகுமார்… 10.5% பாட்டாளி மக்கள் கட்சி கேக்குதுன்னு சொல்லி வன்னியர்களுக்காக இட ஒதுக்கீடு. அவங்க கேட்பாங்க, அவங்க உரிமை. பெறுவார்கள் அவர்கள் கடமை. ஆனா அந்த 10.5 தெற்கு மாவட்டங்களில் குழி பறிச்சுடுச்சு. அவசரமா எடுத்த தீர்மானம். அண்ணனை எப்படியாவது தோக்கடிக்கனும் கொண்டுவரப்பட்ட தீர்மானம்.
அத கொண்டு வந்து முதல்வர் எடப்பாடி பண்ணுனாங்க அந்த துரோகத்தை… நீ என்ன சொன்ன மேடை எல்லாம் போயி ? என்ன சொன்னா பிரச்சாரத்தில்… ரொம்ப அழகா, இது நிரந்தர தீர்வு இல்ல. நிரந்தரமாக அறிவிக்கவில்லை என சொன்னியா இல்லையா ? எடப்பாடி தற்காலிகமாக அறிவிச்சாரு, நிரந்தரம் அல்ல என்று சொன்னியா, இல்லையா ? ஓட்டுக்காக… ஒருத்தராவது பசும்பொன் அய்யாவை பத்தி பேசுறாங்களா பாத்திங்களா, எல்லாம் டானுக என தெரிவித்தார்.