Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரு நல்லவரு… ரொம்ப வல்லவரு… அதிமுக வரவேற்கும்… DMK அமைச்சரை புகழ்ந்த கடம்பூர் ராஜீ ..!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜீ,  பாராளுமன்றத்தில்  தமிழகம் முழுவதும் 38 பிரதிநிதிகள் ஒரே கட்சி .  திமுகவிற்கு அந்த வாய்ப்பை மக்கள் கொடுத்தார்கள். அப்போ 50 பேர் எங்களுக்கு இருந்தார்கள். நாங்கள் இருக்கும் போது ஆரோக்கியம் விவாதம் செய்தோம். அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நாங்கள் 37 நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் போது பங்கேற்றோம்.

ஆனால் அப்படிப்பட்ட நிலைமை இன்றைக்கு இல்லை, இவர்கள் ஏதாவது சொன்னவுடன்… மடியில் கனம் இருக்கு;  வழியில் பயம் இருக்கின்ற மாதிரி, இவர்களை பற்றி பேசியவுடன் வெளியே வந்து விடுகிறார்கள். குறிப்பாக 2ஜி ஸ்பெக்ட்ரம், பல்வேறு பிரச்சினைகளை, மதுவிலக்கு சம்பந்தமான பிரச்சனையில், மது உற்பத்தி ஆலைகள் யார் வசம் இருக்கிறது ?

என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்னவுடன் விளக்கமாக பதில் சொன்னவுடன், உடனே வெளியேறுகிறார்கள், என்றால்…  இவர்களுக்கு மடியில் கனம் இருக்கிறது. உடனே பாராளுமன்றத்தில் வெளிநடப்பு செய்கிறார்கள். இதுதான் நிலைமையாக இருக்கிறது. ஆக்கபூர்வமான விவாதத்தில் இவர்கள் பங்கேற்கவில்லை.

விமானத்தளம் அமைப்பது வரவேற்கத்தக்கது தான், இதற்கு உண்டான முயற்சியை நாங்கள் ஏற்கனவே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 1993 புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பள்ளி நிகழ்ச்சிக்கு வரும்போது ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என்று அந்த இடத்தில் அன்றைக்கு கோரிக்கையாக வைத்தோம். மத்திய அரசுக்கு இந்த கோரிக்கையையும் மாண்புமிகு அம்மா அவர்கள் அனுப்பினர். பிறகு கால சூழ்நிலையில் அது பரிசீலிக்கப்படாமல் இருக்கின்ற நிலையில்,

இன்றைக்கு விமான தளம் அமைத்தால் நிச்சயமாக அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எதிர்க்கட்சி என்ற முறையில் முழுமையான ஒத்துழைப்பு தரும். வரவேற்கப்பட வேண்டிய விஷயம். மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள்.. நல்லவர். வல்லவர்தான், அதனால் அவர் செயலில் காட்ட வேண்டும். அவர் சொல்லை செயலில் காட்டினால் நாங்கள் மனமனதோடு வரவேற்போம் என தெரிவித்தார்.

Categories

Tech |