Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரு நிதானமா தான் பேசுவாரு…. சரியாத்தான் சொல்லுறாரு…. புகழ்ந்து தள்ளும் டிடிவி…!!!

சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்கள் விருப்பமாகும். அதிமுக புரட்சித்தலைவர் ஆரம்பித்த இயக்கம். இன்றளவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களால் கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சசிகலா சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் சேர்ந்து கலந்து ஆலோசித்து முடிவெடுப்பார்கள் என்று கூறியிருந்தார். இது அதிமுக வட்டாரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பேசிய டிடிவி தினகரன், ஓபிஎஸ் சரியாகத்தான் பேசுகிறார். அவர் எப்போதும் நிதானமாகத்தான் பேசுவார். தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்பதுதான் எங்களுடைய லட்சியம். இறுதி மூச்சுவரை போராடி அதிமுகவின் மீட்பது எங்களுடைய இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |