நேற்று முன்னாள் அமைச்சர் கே.பி அன்பழகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். இதற்க்கு அதிமுக கண்டனம் தெரிவித்த நிலையில், இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி, திராவிட முன்னேற்றக் கழக அரசு எங்கள் இயக்கத்தினுடைய தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் திரு கேபி அன்பழகன் வீட்டில் சோதனை நடந்து கொண்டிருக்கிறது.
இந்த ஆட்சியில் இருக்கிற மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தன்னுடைய ஆட்சியின் செயல்பாட்டில் தோல்வியடைந்ததை மக்களிடத்தில் இருந்து மாற்றவேண்டும், மக்களை திசை திருப்பவும், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய முதல் எதிரி மற்றும் இறுதி எதிரியான அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை அழிப்பதற்கும் பல்வேறு முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அதனால் பல்வேறு முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. தற்போது தர்மபுரி மாவட்ட கழக செயலாளர் கேபி அன்பழகன் வீட்டில் சோதனை செய்து கொண்டிருக்கிறார்கள். கேபி அன்பழகன் பாரம்பரியமாக தொழில் செய்கின்றவர்கள். அவர் பாட்டனார் காலத்தில் இருந்து பெரும் தொழில் செய்து செய்து கொண்டிருக்கும் மிகப் பெரிய குடும்பம். அவருடைய பாட்டனார், அவருடைய தந்தை, அவருடைய சித்தப்பா இவர்களெல்லாம் அரசியல் வருவதற்கு முன்பாகவே அந்த குடும்பம் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு,
அந்த பகுதியிலே செல்வந்த குடும்பமாக இருந்து கொண்டு வருகிறது. இப்படி பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அடுத்ததாக கட்சியினுடைய தலைவர்களை, நிர்வாகிகளை சிறுமைப்படுத்தத வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்ற செயல்களில் இந்த அரசு, இந்த ஆட்சியாளர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் .அதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.