Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரு பேசிய கருத்து சரி…. ஆனால் வார்த்தை தான் தப்பு…. பாஜகவை தட்டி கொடுத்த அரசியல் பிரபலம்…!!

செய்தியாளர்களிடம் பேசிடிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சசிகலா பிரச்சாரம் செய்வார்களா ? என்று நீங்கள் அவர்களை சந்திக்கும் போது, இந்த கேள்வியை கேளுங்கள். நான் அவர்கள் சார்பாக பேச மாட்டேன். தஞ்சாவூர் மாணவி விவகாரம் பத்திரிக்கையாளர் நீங்கள் சொல்லித்தான் இந்த மாதிரி விவகாரம் எனக்கு தெரியும். மாணவி அடையாளங்களை வெளிப்படுத்துவது சட்டப்படி தவறு என்றால் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொங்கல் பரிசு குளறுபடி உள்ளாட்சித் தேர்தலில் எதிரொலிக்கும் என்று நம்புறோம். திமுகவின் உண்மை முகம் சுலபமாக வெளிப்படத் தொடங்கி விட்டது.  பத்து வருடமாக காஞ்சு போயிருந்த திமுகவினருக்கு, காஞ்சமாடு  மாடு புகுந்த மாதிரி புகுந்திருக்கிறார்கள். விடியல் அரசு என சொன்னாங்க. திமுகவிற்கு விடியலுக்காக அவங்க தெருத்தெருவா அவர்கள் வேலையை ஆரம்பித்து விட்டார்கள். திமுக எப்படிப்பட்ட கட்சி என தேர்தலுக்கு முன்னரே சொல்லி இருக்கின்றேன். கவிஞர் வைரமுத்து கவிதை சொன்னேன்..

பட்டுவேட்டி காக கனா கண்டு கொண்டிருந்தபோது கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டு விட்டது என்று சொன்னார். அது எது பொருந்துமோ,  இல்லையோ திமுக ஆட்சிவந்துச்சுனா பொருந்தும் என சொன்னேன். அப்படி தான் இப்போது நடக்க ஆரம்பித்துவிட்டது. இதை மக்கள் உணருவார்கள். அதுதான் ஆறு மாதம் ஆகிவிட்டது எல்லாம் ஆரம்பித்து விட்டார்களோ என்று சொல்கிறேன். இப்பதான் ஆட்சிக்கு வந்து இருக்காங்க. அவுங்களுக்கு ஒரு டைம் கொடுக்கணும்னு.

பேங்கில் கூட டைம் 6மாசம் கொடுப்பாங்க. அது மாதிரி டைம் கொடுக்கணும்னு சொல்லி இருந்தேன். இப்போ ஆறு மாதம் தாண்டி முழு வேகத்தில்  இறங்கி விட்டார்கள், அவர்களின் வேளையில்…  அதுதான் பொங்கல் பரிசு எல்லாம். நயினார் நாகேந்திரன் அதிமுகவிலிருந்து சென்றவர். அவர் என் நண்பர் தான். அவர் சொன்ன கருத்தில் தவறு இல்லை. அவர் சொன்ன வார்த்தை தேவையில்லாத வார்த்தைகள். அவர் எப்படி பேசினார் என்று தெரியவில்லை. ஆனால் வார்த்தைளில் தவறு இருக்கே தவிர கருத்து சரியானதுதான்.

கருத்து வேறு, வார்த்தை வேறு. அப்படி சொல்ல கூடாது அரசியலில்…. அவர்கள் தைரியமாக பண்ணவில்லை என்று சொல்லியிருக வேண்டும். அவர்களுக்கு தைரியம் இல்லை அவங்க சொல்லி இருக்கணும். அவுங்க எப்படி தைரியமாக இருப்பாங்க…  பவர் இருந்தபோது தைரியமா  இருப்பாங்க. அவங்க மடியில் கனம் இருக்கின்றது உலகத்துக்கே தெரியும்.

சின்ன குழந்தைக்கு கூட தெரியும். அதனால் அவர்கள் தைரியமாக இருக்க மாட்டாங்க என தெரியும். தைரியமாக பேச வில்லை என்ற வார்த்தையை மாற்றி சொல்லியிருக்கிறார். நான் அவர் சொன்ன வார்த்தைகளை போல என்னைக்கு பயன்படுத்தமாட்டேன்.

Categories

Tech |