Categories
சினிமா

“அவரு முன்ன மாதிரி இல்ல ஷூட்டிங் ஸ்பாட்ல இப்படித்தான் இருக்குறாரு….!” இப்படி மாறிட்டாரே நம்ம தனுஷ்…!!

துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் நடிகர் தனுஷ். இதனை தொடர்ந்து தமிழ் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என சினிமாவில் உச்சம் தொட்ட்டார் நடிகர் தனுஷ். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் தனுஷ் தனது காதல் மனைவி ஐஸ்வர்யாவை பிரிய போவதாக இணையதளங்களில் அறிவித்தார். இது கடந்த இரண்டு வாரங்களாக பேசும் பொருளாக உள்ளது. இவர்கள் பிரிவுக்கு பல்வேறு விதமான காரணங்கள் கிசுகிசுக்கப்படுகின்றது. எனினும் ரஜினிகாந்தின் வற்புறுத்தல் காரணமாக சேர்ந்து வாழ்வார்கள் என கூறப்பட்டது. ஆனால் தனுசுக்கு சேர்ந்து வாழ மனம் இல்லை எனவும் இனியும் அவர்கள் சேர்ந்து வாழ்வது என்பது கேள்விக்குறிதான் எனவும் தனுஷ் குடும்பத்தினர் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா தனுஷ் விவாகரத்திற்கு பின்னர் சூட்டிங் ஸ்பாட்டில் தனுஷின் நடவடிக்கையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அவரின் நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஷூட்டிங் ஸ்பாட்டில் தனுஷ் எப்போதும் கடுகடுவென இருக்கிறாராம். தனுஷ் தற்போது தேவைக்கு மட்டும் பேசிவிட்டு கேரவனுக்குள் நுழைந்து விடுகிறாராம். யாரேனும் தனுஷிடம் பேச வந்தாலும் கூட அவர்களை தவிர்த்து விட்டு கேரவனுக்குள் சென்று தனிமையில் இருக்கிறாராம் தனுஷ்.

முன்பிருந்த மனமகிழ்ச்சி தனுஷிடம் தற்போது இல்லை என கூறப்படுகிறது. முன்னதாக மாமியார் தனுஷுக்கு புதிய படவாய்ப்புகள் கொடுக்கக்கூடாது என ஒரு பக்கம் அழுத்தம் கொடுக்க மற்றொரு பக்கம் எனது அப்பாவிற்கு காலா படத்தில் நடித்ததற்காக சம்பளத்தை கொடுங்கள் என மனைவி ஒரு பக்கம் தனுசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதால் தனுஷ் இவ்வாறு இருக்கிறார் என பேசப்படுகிறது.

Categories

Tech |