Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அவரு வேண்டாம்னு சொல்லிட்டாரு..! கர்ப்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு… திண்டுக்கல்லில் சோகம்..!!

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே 8 மாத கர்ப்பிணி பெண் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுப்பட்டியில் சிவசக்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மனைவி இருந்தார். கடந்த 1 1/2 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கவிதா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். திருச்சி மாவட்டம் கட்டாம்பட்டி பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு கவிதை செல்ல வேண்டும் என்று சிவசக்தியிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் கவிதா மன வேதனையில் இருந்துள்ளார். இந்நிலையில் இரவில் அனைவரும் தூங்கிய பிறகு சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கவிதாவின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கவிதாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |