Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரெல்லாம் ஒரு ஆளு…! நான் பதில் சொல்ல மாட்டேன்… புகழேந்தியை நோஸ்கட் செய்த ஜெயக்குமார் …!!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நம்முடைய பொன்மனச்செம்மல் இதய தெய்வம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மாபெரும் இயக்கமாக இருக்கின்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 50வது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சார்ந்த அன்பு சகோதரர்கள்,

மகளிர் அணியை சார்ந்த வீராங்கனைகள் செயல்வீரர்கள், கிளை கழகத்திலிருந்து தலைமை கழகம் வரை எழுச்சியோடு கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் தென் சென்னை, வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழகத்தின் சார்பில் இன்றைய தினம் திரு வி க நகர் பகுதியிலும், ராயபுரம் சட்டமன்ற தொகுதியிலும் பல்வேறு இடங்களில் நமது பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எங்களுக்கெல்லாம் உருவாக்கிக் கொடுத்த வெற்றி கொடியாக இருக்கின்ற

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கொடியினை ஏற்றி எப்போதுமே மக்களுக்கு ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற வகையில் அன்னதானம் வழங்குதல், பொன்விழா ஆண்டை முன்னிட்டு அதேபோல ஆதரவற்றவர்களுக்கு  உதவி செய்தல் போன்ற எண்ணற்ற நிகழ்ச்சிகளை இன்றைக்கு எழுச்சியுடன் தமிழ்நாடு முழுவதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சகோதர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் இன்றைக்கு நம்முடைய வட சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழக சபை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அப்பொழுது செய்தியாளர்களில் ஒருவர்,” புகழேந்தி என்ன சொல்கிறார் என்றால் எடப்பாடி பழனிசாமியை கட்சியை விட்டு நீக்கிவிட்டு ஓபிஎஸ் ஒற்றை தலைமை பொறுப்பேற்க வேண்டும்” என்று கூறினார் அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், “நான் ஒரு அரசியல்வாதிக்கு மட்டுமே பதில் சொல்லமுடியும். ஆகவே அவருக்கு பதில் சொல்லவேண்டும் என்று எனக்கு தேவை இல்லை என தெரிவித்தார்.

Categories

Tech |