இங்கிலாந்து மகாராணி 2ஆம் எலிசபெத் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து மகாராணி எலிசபெத் மறைவிற்கு பிரதமர்மோடி உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மகாராணி எலிசபெத் மறைவிற்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து பதிவிட்டிருக்கிறார். அப்பதிவில் “எழுபது ஆண்டுகளாக இங்கிலாந்து நாட்டின் மகாராணியாக இருந்து வந்த 2ஆம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன்.
ஆங்கிலேயர்கள் மட்டுமின்றி அகிலஉலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் திகழ்ந்தார். 25 வருடங்களுக்கு முன் எங்களது அழைப்பை ஏற்று மருதநாயகம் திரைப்படத்தின் தொடக்க விழாவில் பங்கேற்று வாழ்த்தினார். அனேகமாக அவர் பங்கேற்ற ஒரே திரைப்பட படப் பிடிப்பு அது தான். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு லண்டனில் நடைபெற்ற கலாச்சார நிகழ்வில் அரண்மனையில் அவரை சந்தித்துப் பேசியது இன்னமும் பசுமையாக நினைவு இருக்கிறது. தங்களது பிரியத்திற்குரிய ராணியை இழந்துவாடும் இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என அவர் பதிவிட்டுள்ளார்.
எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாக திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டு துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார். (1/3) pic.twitter.com/EFmKfqls7U
— Kamal Haasan (@ikamalhaasan) September 9, 2022