Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அவரை பார்த்து எல்லாரும் கத்துக்கோங்க”…. பொடி வைத்து பேசிய யுவராஜ்….!!!!

ஏப்ரல் 14ஆம் தேதி நடந்த லீக் போட்டியில் குஜராத் டைடன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியின் இறுதியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.

பட்லர் நல்ல மனசு :-

இந்த போட்டியில் பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரரான ஜாஸ் பட்லர் செய்த விஷயம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதாவது ஜாஸ் பட்லர் பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த போது பந்தை தடுத்து நிறுத்தினார். இருப்பினும் பவுண்டரி லைனை தன்னுடைய கால்கள் தொட்டிருக்கலாம் என்று கருதி நடுவரை வைத்து அதனை பரிசோதிக்க சொன்னார். ஜாஸ் பட்லரின் இந்த செயலுக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

யுவராஜ் டுவிட் பதிவு :-

இந்த விவகாரம் தொடர்பில் யுவராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “இன்னும் கிரிக்கெட்டில் ஜென்டில்மேன்கள் பலரும் இருக்கிறார்கள். ஜாஸ் பட்லரை பார்த்து மற்ற வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். குறிப்பாக பட்லரை பார்த்து சக அணி வீரரே கற்றுக்கொள்ள வேண்டும்” என்று பொடிவைத்து பேசியுள்ளார். அதாவது சக வீரர் என்று யுவராஜ் குறிப்பிட்டது ரவிச்சந்திரன் அஸ்வினை தான். ஐபிஎலில் மான்கட்டிங் செய்து பட்லரை அஸ்வின் வீழ்த்தியது யாராலும் மறக்க முடியாது. அதோடு மட்டுமில்லாமல் இப்படி அவுட் ஆக்குவது பௌலருக்கு அழகல்ல என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் யுவராஜின் கருத்திற்கு ஆதரவு, எதிர்ப்பு இரண்டும் கலவையாக வந்து கொண்டிருக்கிறது. மேலும் அஸ்வின் இதற்கு பதில் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |