Categories
தேனி மாவட்ட செய்திகள்

அவரோட நினைவாக இத கொடுத்திருக்காங்க…. முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு…. தேனியில் நடந்த நிகழ்ச்சி….!!

தேனியில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வினியோகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தற்போது தமிழ் திரையுலக நடிகரான விவேக் மாரடைப்பால் மரணமடைந்தார். தமிழகத்தில் இவரை தெரியாத நபர்களே இருக்க முடியாது. மேலும் இவர் திரையுலக நடிகர் மட்டுமின்றி சமுதாய அக்கறையின் விளைவாக பலவிதமான மரக்கன்றுகளையும் நட்டுள்ளார். இந்த நிலையில் தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வைத்து காவல்துறையினர்களும், நஞ்சை தன்னார்வ அமைப்பினர்களும் ஒன்றாக சேர்ந்து மறைந்த நடிகரான விவேக்கின் நினைவை பறைசாற்றும் விதமாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை வினியோகம் செய்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சிக்கு உத்தமபாளையத்தின் காவல்துறை துணை சூப்பிரண்டான சின்னக்கண்ணு தலைமை வகித்துள்ளார். மேலும் இதில் சில முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Categories

Tech |