காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டு பேசியுள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேளாண் சட்டங்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான தகவல்களை வெளியிட்டு பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “போராடும் விவசாயிகளுக்கு 100 சதவீதம் ஆதரவு தருகிறேன்.
எனக்கு ஒரு குணம் உள்ளது நரேந்திர மோடி மட்டுமல்ல யாரைப் பார்த்தும் எனக்கு பயமில்லை. அவர்கள் என்னை சுட முடியும், ஆனால் என்னை தொட முடியாது. நான் தேசப்பற்று மிக்கவன். எனது நாட்டை நான் பாதுகாப்பேன். அவர்களைவிட(பாஜக) நான் தேசப் பற்று மிக்கவன்” என்று கூறியுள்ளார்.