Categories
உலக செய்திகள்

அவர்களின் சிவப்பு கோடு மரியுபோல் தான்…. உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் எச்சரிக்கை…..!!!!!

உக்ரைனின் மரியுபோல் நகரமே ரஷ்யா உடனான அமைதி பேச்சுவார்த்தையின் சிவப்புகோடு என்று அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா எச்சரித்துள்ளார்.

உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோலை ஆக்கிரமிக்கும் நோக்கத்தில் ரஷ்யபடைகள் பல வாரங்களாக முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தினர். இப்போது மரியுபோலின் அனைத்து நகரப் பகுதிகளையும் கைப்பற்றிவிட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து உக்ரைனிய பிரதமர் Denys Shmyhal வெளியிட்ட அறிக்கையில், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள துறைமுக நகரான மரியுபோலில் நம் வீரர்கள் இன்னமும் உள்ளதாகவும், அவர்கள் இறுதிவரை போராடுவார்கள் எனவும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் ரஷ்யாவுடனான அமைதி பேச்சுவார்த்தை நீண்டகாலமாக நடைபெறாமல் உள்ளதை சுட்டிக்காட்டி, மரியுபோல் நகரமே உக்ரைனுடனான அமைதி பேச்சுவார்தைகளுக்கான சிவப்பு எல்லைக் கோடு என உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார். அத்துடன் மரியுபோல் நகரில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு ரஷ்யராணுவத்திடம் சரணடையும் உக்ரைனிய வீரர்களுக்கு உயிர் உத்திரவாதம் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் உக்ரைன் நிராகரித்து இருக்கிறது.

Categories

Tech |