Categories
உலக செய்திகள்

அவர்களுக்கு எதிராக வன்முறை பதிவுகளை வெளியிட…. பேஸ்புக் நிறுவனம் அனுமதி…..!!!!

உக்ரைன்-ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து 16-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள்  வலியுறுத்தி வருகின்றன. மேலும் ஐ.நா அமைப்பு மற்றும் போப் பிரான்சிஸ் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். போரால் இருநாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என்று பலர் உயிரிழந்துள்ளனர். இப்போர் காரணமாக பல நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் உக்ரைனில் இருந்து பாதுகாப்பு தேடி வெளியேறி வருகின்றனர்.
இந்த நிலையில் ரஷ்ய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அந்நாட்டு வீரர்களுக்கு எதிரான பதிவுகளை வெளியிடுவதற்குபேஸ்புக் நிறுவனமானது அனுமதி வழங்கியுள்ளது.  இது குறித்து பேஸ்புக் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டுள்ள தாக்குதல் காரணமாக ரஷ்ய படைவீரர்களுக்கு மரணம் போன்ற பதிவுகளை வெளியிடுவதற்கு ஏற்ற அடிப்படையில், விதிகளில் தற்காலிக அடிப்படையில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.  ஆனால் குடிமக்களுக்கு எதிரான நம்பகதன்மை வாய்ந்த அச்சுறுத்தல்களுக்கு அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளது.

Categories

Tech |