Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்”… கமிஷனருக்கு மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு…!!!!!!!!

சென்னை செங்குன்றத்தை அடுத்த அலமாதி வேட்டைக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (31). இவரை கொடுங்கையூர் போலீசார் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்றனர். இந்தநிலையில் கொடுங்கையூர் போலீஸ் நிலையத்தில் ராஜசேகர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இதில் போலீசார் தாக்கியதில் தான் ராஜசேகர் இறந்து போனார் என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர், பொன்ராஜ் உட்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் ராஜசேகரின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்கவும் தனது குடும்பத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதால் உரிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும் என ராஜசேகரின் தாயார் உஷா ராணி மற்றும் அவரது குடும்பத்தினர் மாநில மனித உரிமை ஆணையத்தில் நேற்று ஆஜராகி மனு அளித்துள்ளனர். இந்த மனுவை விசாரித்த ஆணையத்தின் தலைவர் பாஸ்கரன் மனுதாரர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சென்னை நகர போலீஸ் கமிஷனர் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மனுதாரர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை கெல்லீல்  பகுதியில் உள்ள அரசு இல்லத்தில் தற்காலிகமாக தங்க வைத்து பாதுகாப்பு வழங்கலாம். ராஜசேகரின் பிரேத பரிசோதனை அறிக்கை தயாரானதும் மனுதாரருக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.

Categories

Tech |