கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் வைத்து தமிழ்நாடு கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்றுநடைபெற்றது. இந்த கூட்டமானது மாவட்ட தலைவர் குழந்தைவேல் தலைமையில் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் முனுசாமி, மாவட்ட செயலாளர் சுதர்சனன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், மாவட்ட பொது செயலாளர் மணி, மாவட்ட பொருளாளர் விஜயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு. அதன் பின்னர் தொழிலாளர்கள் நல வாரியத்தில் மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.
கட்டுமான தொழிலாளர்களுக்கு மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும், அவர்களின் குழந்தைகள் கல்வி செலவு முழுவதையும் சில வாரியம் ஏற்க வேண்டும். மேலும் வீடு இல்லாமல் தவித்து வரும் கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டு மனை வழங்கி வீடு கட்டிக் கொடுக்க வேண்டும். இதனையடுத்து பெண் கட்டுமான தொழிலாளர்களுக்கு 50 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். மேலும் கட்டுமான பணிகள் ஈடுபடும் பெண்களுக்கு சட்டபடியாக குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.