இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சிட்னியில் நடந்த இனரீதியான விமர்சனத்திற்கு எதிராக விட்டு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் நான்காம் நாள் ஆட்டத்தின் போது மைதானத்தில் இருந்த முகமது சிராஜை இனரீதியாக இழிவுபடுத்திய 6 ரசிகர்களை மைதானத்திலிருந்து மைதான பாதுகாப்பு ஊழியர்கள் வெளியேற்றினர். இந்த விவகாரத்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கண்டனமும், மன்னிப்பும் கேட்டது. மேலும் முன்னாள் வீரர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
The incident needs to be looked at with absolute urgency and seriousness and strict action against the offenders should set things straight for once.
— Virat Kohli (@imVkohli) January 10, 2021
இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இனரீதியான விமர்சனங்கள் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. கிரிக்கெட் தளத்தில் இதுபோன்ற பல சம்பவங்கள் நிகழ்வது வருத்தம் அளிக்கிறது. இது போன்று இனவெறி செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் நடவடிக்கையைப் பார்த்து இனி யாரும் இப்படி செய்வதற்கு யோசிக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.