சன்னி லியோன் பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சன்னி லியோன். இவர் தற்போது அனாமிகா என்ற வெப்சீரிஸில் நடிக்கின்றார். இந்நிலையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்த போது கூறியுள்ளதாவது, “அனாமிகா ஷூட்டிங்கில் நான் செலவழித்த ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நாளும் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. காரணம் எனக்கு சண்டை காட்சிகள் மிகவும் பிடிக்கும். நான் ரியல் லைப்பில் சண்டையிடமாட்டேன். அதனால் இதுபோன்ற வித்தியாசமான செயல்களை செய்வது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. இத்திரைப்படத்திற்கு அனாமிகா என்று பெயர் வைத்தது எனக்கு சந்தோஷத்தை தருகின்றது. படத்தில், நடிப்பாக இருந்தாலும் சரி சண்டை காட்சியாக இருந்தாலும் சரி என்னுடைய கதாபாத்திரத்தை எப்படி உருவாக்கினார்களோ தெரியவில்லை. இதுவரை நான் அனுபவித்திராத ஒன்று.
யாரோ ஒருவன் தனது முழு முயற்சி மற்றும் நம்பிக்கையை என் மேல் வைத்தது எனக்கு சந்தோஷமாக இருக்கின்றது. நான் கவர்ச்சியாக நடிப்பேன் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள். அப்படி நடிப்பதில் எனக்கு எந்த விதமான பிரச்சனையும் இல்லை. இப்படத்தில் சண்டை காட்சிகள் இருக்கின்றது. நல்ல கதாபாத்திரம் உள்ளது. காதல் காட்சிகள் இருக்கின்றது. மேலும் நெருக்கமான காட்சிகளும் உள்ளது. ஆனால் பொதுவாக எதிர்பார்க்கும் கதாபாத்திரம் இது இல்லை. நான் எனது ரசிகர்களை மிகவும் நேசிக்கிறேன். அவர்கள் நான் எதை செய்தாலும் ஏற்றுக்கொள்கிறார்கள் சில சமயத்தில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். ஒவ்வொரு படத்திலும் புதுவிதமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றேன். நான் அடுத்தடுத்து புது விதமான கதாபாத்திரங்களில் நடித்து என்னிடம் உள்ள திறமைகளை வெளிகாட்டுவேன்” என்று கூறியுள்ளார்.