சீன அரசால் குற்றம் சாட்டப்பட்ட கன்னட அதிகாரிகளின் வழக்கு விசாரணைக்கு வந்ததாக தகவல் கிடைத்துள்ளது.
சீனாவை சேர்ந்த ஹூவாய் தொழில்நுட்பத்தின் தலைமை செயல் அலுவலர் மெங் வாங்ஷூ. இவரின் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்க அரசு பணமோசடி செய்ததாக குற்றம் சுமத்திய காரணத்தால் கன்னட காவல்துறையினர் வாங்ஷூவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனால் கோபமடைந்த சீனா அதற்கு பழிவாங்கும் விதமாக அந்நாட்டில் தங்கியிருந்த இரண்டு கன்னட அதிகாரிகளை வேவு பார்த்ததாக கூறி கைது செய்துள்ளது.
இந்நிலையில் சீன அரசு கைது செய்த கன்னட அதிகாரிகளில் ஒருவரான மைக்கேல் ஸ்பாவோரின் வழக்கு தற்போது நீதிமன்ற விசாரணைக்கு வந்துள்ளது. அவ்வகையில் கிட்டத்தட்ட 3 மணி நேரம் நடைபெற்ற இந்த விசாரணையில் எந்த முடிவும் தெரிவிக்காமல் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.