Categories
தேசிய செய்திகள்

‘அவர்தான் எங்கள் நாயகன்’… ‘அவர்தான் எங்கள் தலைவன்’… ராவணனை கடவுளாக வழிபடும் மக்கள்…. எங்கு தெரியுமா…?

உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்தில் மக்கள் ராவணனை கடவுளாக வணங்கி வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டா பகுதி மக்கள் ராவணனை தங்களது தலைவனாகவும், நாயகனாகவும் கொண்டாடி வருகின்றனர். மேலும் ராவணனே எங்களின் கடவுள் என்று வழிபட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பிஷ்ராக் என்ற இடத்தில் ராவணனுக்கும் அவரது மனைவி மண்டோதரிக்கும் கோவில் அமைத்து தனித் தனியாக சன்னதி வைத்து வழிபட்டு வருகின்றனர்.

தங்களின் ஊரில்தான் ராவணன் பிறந்ததாக நம்பும் அப்பகுதி மக்கள் ‘ராவணனே எங்களின் தலைவன், எங்களின் நாயகன்’ என்று கூறுகின்றனர். மேலும் வடமாநிலங்களில் நவராத்திரி விழாவில் ராமன், ராவணனை அழிப்பதை கொண்டாடுவது வழக்கம். அன்றைய நாளை இந்த ஊர் மக்கள் தங்களின் துக்க நாளாக அனுஷ்டித்து வருவதாக கூறுகின்றனர்.

Categories

Tech |