Categories
தேசிய செய்திகள் விளையாட்டு

“அவர் என்னை படுக்கைக்கு அழைத்தார்” பயிற்சியாளர் மீது வீராங்கனை…. பரபரப்பு புகார்….!!!!!

ஆசிய சைக்கிளிங் விளையாட்டு போட்டிகள் டெல்லியில் வரும் ஜூன் 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான தயாரிப்பிற்காக ஸ்லாவேனியாவில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் ஆர்.கே.சர்மா என்பவர் சைக்கிளிங் பயிற்சியாளராக இருந்தார். இந்நிலையில் சைக்கிளிங் பயிற்சியாளர் மீது வீராங்கனை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த புகாரில், “ஸ்லாவேனியாவில் கடந்த மாதம் நடந்த பயிற்சி முகாமின் போது, தன்னை அடிக்கடி தன் அறைக்கு அழைத்து பாலியல் ரீதியாக சீண்டியதாகவும் பயிற்சிக்கான மசாஜ் என்ற பெயரில் கண்ட இடங்களில் கை வைப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு துன்புறுத்தியதாகவும், தான் ஆசைக்கு இணங்க மறுத்ததால் தன் விளையாட்டு வாழ்க்கையையே காலி செய்து விடுவேன் என்றும் கூறியதாகவும் இந்திய ஸ்போர்ட்ஸ் அதாரிட்டியிடம் அந்த வீராங்கனை புகார் அளித்துள்ளார்.

இந்திய வீராங்கனை அளித்துள்ள புகார் தொடர்பாக விசாரிக்க விளையாட்டு ஆணையம் ஒரு குழுவை அமைத்துள்ளது. மேலும் சைக்கிளிங் சம்மேளனம் சார்பிலும் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. புகார் அளித்த வீராங்கனையை உடனடியாக சைக்கிளிங் சம்மேளனம் இந்தியா அழைத்து வந்துள்ளது.

Categories

Tech |