Categories
சினிமா தமிழ் சினிமா

‘அவர் என்னை விட இளையவர்’… வருங்கால கணவர் குறித்து பேசிய சூப்பர் சிங்கர் மாளவிகா…!!!

சூப்பர் சிங்கர் பிரபலம் மாளவிகா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொள்ளும் பலரும் தற்போது பின்னணி பாடகர்களாக மாறி இருக்கின்றனர். அந்த வகையில் சூப்பர் சிங்கர் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்து பின்னணி பாடகியாக மாறியவர் மாளவிகா. சமீபத்தில் மாளவிகா தனது வருங்கால கணவருடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். இந்நிலையில் மாளவிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.

 

அப்போது ஒரு ரசிகர், உங்களது வருங்கால கணவர் உங்களை விட இளையவரா? அல்லது நீங்கள் இளையவரா? என கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த மாளவிகா, ‘ஆம் அவர் என்னைவிட 1 வயது இளையவர். அவருக்கு 32 வயது’ என தெரிவித்துள்ளார். இதையடுத்து ஒரு ரசிகர், உங்களை விட வயது குறைவானவரை திருமணம் செய்ய உங்கள் பெற்றோர் எப்படி சம்மதித்தார்கள்? என கேட்டுள்ளார் . இதற்கு மாளவிகா, ‘எனக்கு திருமணம் ஆகாதா என என் பெற்றோர் காத்திருந்தனர். நான் ஒருவரை பிடித்திருக்கிறது என்று கூறியதும் உடனடியாக சம்மதித்துவிட்டனர்’ என பதிலளித்துள்ளார்.

Categories

Tech |