Categories
தேசிய செய்திகள்

“அவர் ஒன்றும் கண்காட்சி பொருளல்ல”… மத்திய அமைச்சரின் செயலால்… கொந்தளித்த மன்மோகன் சிங் மகள்…!!!

மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தை மத்திய அமைச்சர் வெளியிட்டதற்கு அவர் குடும்பத்தினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் பிரதமரான மன்மோகன் சிங் 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை பிரதமராக பதவி வகித்து வந்துள்ளார். கடுமையான காய்ச்சல் மற்றும் உடல்நிலை சோர்வால் அவதியுற்று வந்த அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மன்மோகன்சிங்கை மரியாதை நிமித்தமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சூர் மாதவியா நேரில் சந்தித்து வந்தார். இதனைத் தொடர்ந்து மன்மோகன் சிங் சிகிச்சை பெறும் புகைப்படத்தை பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் வெளியிட்டிருந்தார். இதற்கு மன்மோகன் சிங்கின் மனைவி மற்றும் அவருடைய மகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து மன்மோகன் சிங்கின் மகள் டாமன் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “என் தந்தை டெங்கு தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். அவரை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் சிகிச்சையில் உள்ள எனது தந்தையை புகைப்படம் எடுத்தார். அதற்கு எனது தாய் எவ்வளவு மறுப்பு தெரிவித்தும் அவர் புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டும் உள்ளார். இங்கு செயலால்தான் மிகவும் வேதனை அடைந்துள்ளார். என் அப்பா அம்மா இருவரும் வயதானவர்கள் ஏற்கனவே தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் இவ்வாறு புகைப்படம் எடுத்து வெளியிடுவது எங்கள் மனநிலையையும் பாதிக்கிறது”. என்று வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார்.

Categories

Tech |