Categories
அரசியல் மாநில செய்திகள்

அவர் ஒரு துரோகி….! எங்ககிட்ட தொண்டர்கள்….. அவருகிட்ட குண்டர்கள்…. கொந்தளித்த சி. வி சண்முகம்….!!!!!

அதிமுக சார்பாக மின் கட்டண உயர்வை கண்டித்து நேற்று தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், அதிமுகவின் மூன்று முறை முதல்வர் பதவியை அனுபவித்துவிட்டு கட்சி அலுவலகத்தை எட்டி உதைத்து அலுவலகத்தை சூறையாடி பத்திரம் உள்ளிட்ட எல்லாவற்றையும் திருடிவிட்டு அதிமுகவில் உள்ள எட்டப்பர்களை வைத்துக்கொண்டு அதிமுகவை அடக்கி விடலாம் என்று நினைக்கும் முதல்வர் ஸ்டாலின் கனவு பலிக்காது.

ஓபிஎஸ் தொண்டர்களை நம்பி இருக்கிறேன் என்று கூறி வருகிறார். ஆனால் தொண்டர்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். அவர்கள் பக்கம் ரவுடிகளும் குண்டர்களுமே இருக்கிறார்கள். தொண்டர்கள் உள்ளவரை யார் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. 100 OPS வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது. 100 துரோகிகளை அதிமுக பார்த்து விட்டது. சின்னத்தையும் கட்சியையும் உடைக்க நினைத்த ஓபிஎஸ் க்கு மீண்டும் துணை முதல்வர் பதவி வழங்கியவர் எடப்பாடி பழனிச்சாமி என்று பேசியுள்ளார்

Categories

Tech |