Categories
அரசியல்

”அவர் ஒரு முட்டாள்” நான் பீஹாரி இல்லை…. எச்.ராஜா பரபரப்பு பேட்டி …!!

என்னை ஒரு முட்டாள் பிஹாரி என சொல்கின்றான் என எச்.ராஜா ஆவேசமாக பேசினார்.

திரௌபதி படத்தின் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் வெளியாக இருக்கும் ருத்ரதாண்டவ Preview show -வை பார்த்தபின்பு செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா இங்க எல்லாருக்கும் தமிழ் முழுசா தெரியுமா ? தமிழ் மொழி வாழ்க என ”ழ”க்கு இருக்கக்கூடிய சிறப்பு எழுத்தை சொல்லத்தெரியாத ரொம்ப பேரு இன்றைக்கு தமிழ் பேசிகிட்டு இருக்கீங்க.

ஹிந்துவும், தமிழும் வெவ்வேறு என்று சொன்னது யாரு ?  காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே –  ஹிந்து இல்லன்னா தமிழ் எங்கய்யா வந்தது ? என்ன பேசுறீங்க எல்லாரும். இது தான் சொல்றேன். தமிழ் வேற ஹிந்து வேற என்று பேசக்கூடிய அளவுக்கு கேட்டுக்கொள்கின்றேன்.

அட… என்னை பீகாரி என சொல்லுறான் ஒரு முட்டாள், நான்  பச்சை தஞ்சாவூரான். சீமான் யாரு ? முதல் சீமான் அம்மா தமிழச்சியா ? அவர் ஒரு மலையாளி. தமிழ் ஹிந்து எல்லாம் பேசாதீங்க. எந்தப் பய சொன்னது ஆரியர்கள் வந்தார்கள் என்று. ஆரியர் வந்ததற்கு என்ன ஆதாரம் ?  ஒருத்தர் சொல்லுங்க பார்ப்போம் ? பொய்யை பரப்பாதீர்கள், அதற்கு துணை போகாதீர்கள்.

சமஸ்கிருதத்துக்கும் தமிழுக்கும் என்னைக்கு மோதல் நடந்துச்சு. கால்டுவெல் 1838 வந்த பிறகு கால்டுவெல் புத்தர்கள் எல்லாம் பரப்புகின்ற பொய்க்கு நீங்க துணை போகாதீர்கள். ஆரிய படையெடுப்பு என்கின்ற இந்த கட்டுக்கதைகள் சரியான  குப்பைத்தொட்டி என சீமான் கடுமையாக பேசினார்.

Categories

Tech |